LOADING

Diamond Jubilee Anthem

Celebrating sixty glorious years of academic excellence, women empowerment, values, and service to society — the Diamond Jubilee Anthem reflects the proud legacy and inspiring journey of Annammal College of Education for Women.

அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்

அகமகிழ்ந்தே பாடிடுவோம் (2)


முத்து நகரில் உதித்ததுவே

சாதனைகள் பல புரிந்ததுவே

பெண்கள் கல்வியை உயர்த்தியதே

வாழ்வில் ஒளியை ஏற்றியதே

வாழியவே வாழியவே

அன்னம்மாள் கல்லூரி வாழியவே (2)


பெண்கள் சாதனை புரிந்திடவே

மானுடம் மதித்திட உயர்ந்திடவே

கல்வி பணியை சிறப்புடனே

செய்து வருகின்ற களஞ்சியமே

அறிவொளி தந்திடும் ஆலயமே.....ஆ..ஆ..ஆ.. (2)


மகளிர் மாண்புரச் செய்திடவே

பண்பெனும் விதைகளை விதைத்திடவே

ஞானத்தில் சிறந்து விளங்கிடவே

கல்வி சுடரினை ஏற்றியதே

அறிவோடு அருளையும் வழங்கியதே

வாழியவே வாழியவே

அன்னம்மாள் கல்லூரி வாழியவே (2)